Featured post

ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின்

 *“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”  பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும்,  ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திரு...

Thursday 17 October 2024

ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின்

 *“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”  பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும்,  ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக,  முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ்  பாராட்டியுள்ளார்*






முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”  சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது.  ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ்,  டார்க் ஹ்யூமர் த்ரில்லர், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்பங்களுடன் சிலிர்க்க வைக்கும் தொடராக உருவாகியுள்ளது. நவீன் சந்திரா மற்றும் நந்தா தலைமையிலான ஒரு நட்சத்திர நடிகர்கள் குழு இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்,  இவர்களுடன் புதிய ஆற்றல் மற்றும் துணிச்சலான நடிப்பு திறமை கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் இளம் நடிகர்கள் குழுவும் உள்ளது. அவர்களின் அழுத்தமான நடிப்பு  கதைக்கு உயிரூட்டியுள்ளது.


https://www.youtube.com/watch?v=MgHTigSWuqQ



*முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,

நம்பிக்கைக்குரிய இளம் நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் இந்த சீரிஸ்  பற்றி கூறியதாவது…,  

ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் தனித்துவமான கதைக்களம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு அற்புதமான சீரிஸ். மிக அசாதாரண சூழ்நிலைகளில் சிக்கும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் இந்த சீரிஸ்*


ஒவ்வொரு திருப்பத்திலும் ஆபத்து பதுங்கியிருக்கும் மிக வித்தியாசமான  கதையுடன் உருவாகியிருக்கும், இந்த தமிழ் டார்க் ஹ்யூமர் த்ரில்லர் தொடர், கிளாசிக் கேமை தழுவி உருவாகியுள்ளது. இந்த தொடரில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசிய கார்த்திக் சுப்பராஜ், இளம் குழுவின் முழு அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தை வெகுவாக பாராட்டினார், "கேமராக்கள் ரோல் ஆவதற்கு முன்பே குழந்தைகள் தங்கள் பாத்திரங்களாக தயாராகி இருந்தனர், இந்த தொடரில் தங்கள் பாத்திரங்களைப் பற்றி மிகத் தெளிவுடன் தெரிந்து கொண்டு,  ஆர்வமாக அர்ப்பணிப்புடன் நடித்தனர்.  இந்த சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு, ஒரு புதிய ஆற்றலையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வந்தனர், இதனால் கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாகவும், உண்மையானதாகவும் இருக்கும்.


 எ ஸ்டோன் பெஞ்ச் புரொடக்‌ஷன் பேனரின் கீழ் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் சீரிஸை, கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் உருவாக்கத்தில், அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில் நவீன் சந்திராவுடன் நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரிந்தா, ஸ்ரீஜித் ரவி, எம்.எஸ். சம்ரித், எஸ். சூர்யா ராகவேஷ்வர், எஸ். சூர்யகுமார், தருண் யுவராஜ் மற்றும் சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 18 முதல், இந்த சீரிஸ், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட உள்ளது, தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு, இந்தியாவெங்கும் உள்ள பார்வையாளர்கள் அணுகும் வகையில் திரையிடப்படுகிறது.

Snakes & Ladders curator Karthik Subbaraj praises the Prime Video thriller series

 *Snakes & Ladders curator Karthik Subbaraj praises  the Prime Video thriller series’ young cast, and says that they brought a fresh energy and authenticity to the story*

 




Filmmaker Karthik Subbaraj’s curated series Snakes & Ladders is buzzing with anticipation. With its trailer racking up an impressive 10 million views on YouTube, excitement for this Prime Video Original Tamil series is at an all-time high. The nine-episode dark humor thriller, packed with suspense, mystery, and jaw-dropping twists, comes to life through a stellar ensemble cast led by Naveen Chandra and Nandha. Alongside them is a dynamic group of young actors who infuse the series with fresh energy and bold performances. Their compelling portrayals add layers of intrigue and emotion, making each twist and turn even more impactful.


https://www.youtube.com/watch?v=MgHTigSWuqQ


*Karthik Subbaraj shared insights about the series, discussing his experience working with a promising young cast and the premise of the show. He explained that Snakes & Ladders is a standalone series with its own distinct storyline and characters, centred around ordinary kids placed in extraordinary situations.*

 

With a gripping narrative where danger lurks at every turn, the Tamil dark humor thriller series draws its inspiration from the classic game.  Talking about his experience working on the series, Karthik Subbaraj heaped praise on the young ensemble for their sheer dedication and enthusiasm, highlighting, "The kids were prepared for their part long before the cameras rolled, eager and enthusiastic about their roles in the series. They found joy in every moment of being a part of the project. They brought a fresh energy and authenticity to their roles, making the characters feel real and relatable."

 

Produced by Kalyan Subramanian under the banner of A Stone Bench Production, Snakes & Ladders is created by Kamala Alchemis and Dhivakar Kamal, and directed by Ashok Veerappan, Bharath Muralidharan, and Kamala Alchemis. The series features Naveen Chandra alongside Nandha, Manoj Bharathiraja, Muthukumar, Srinda, Sreejith Ravi, M. S. Samrith, S. Surya Ragaveshwar, S. Suryakumar, Tarun Yuvraaj, and Sasha Bharen in pivotal roles.  It is set to premiere exclusively on Prime Video, starting October 18, in Tamil, with dubs in Telugu, Malayalam, Kannada, and Hindi languages, making it accessible to a wider audience.

The unity in diversity policy our country proudly declares is more evident

 The unity in diversity policy  our country proudly declares is more evident in the entertainment industry.The regional and linguistic barriers hold no place in talent and creativity.  








Popular model turned actress Monisha Sen is all set to venture into The South Indian cinema and her arrival is greeted by many popular production houses and directors of the south.  


“South Indian cinema Ofcourse, is in a massive scale today, as we all know. 💖

Actors like Prabhas, NTR, Mahesh Babu, Allu Arjun, Vijay Deverakonda, Dulquer Salman, Dhanush, Siva Karthikeyan. Actresses such as Kajal Agarwal, Tamannah Bhatia, Shruti Haasan, are the ones who I've loved watching, over the years, along with, all the other lovely artists, there as well. Their amazing act in cinema , the scale , the color , the commercial engagement , all of it , as a whole , makes every single, South Indian piece, a treat, and so wholesome, to watch. Having been complimented, time and again, because of my features, and being told quite a few times that, you should definitely be in South Indian cinema too, I realised, perhaps, there's a lot, waiting for me, there, and it's time.”  Says Monisha Sen with confidence.

வேற்றுமையில் ஒற்றுமை' என்ற நம் நாட்டின் பெருமைமிகு கொள்கை

 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற நம் நாட்டின் பெருமைமிகு கொள்கை பொழுதுபோக்கு துறையில் அதிகம் வெளிப்படுகிறது. பிராந்திய மற்றும் மொழித் தடைகள் போன்றவற்றைக் கடந்து திறமை மட்டுமே இங்கு மதிப்பிடப்படுகிறது.








பிரபல மாடல் மோனிஷா சென் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். அவரது சினிமா வருகைக்கு பல பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


நடிகையாக அறிமுகமாவது பற்றி மோனிஷா சென் பகிர்ந்திருப்பதாவது, "இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிரபாஸ், என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மற்றும் காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளை என இவர்களைப் பல ஆண்டுகளாக ரசிகர்களைப் போலவே நானும் பார்த்து ரசித்து வருகிறேன். சினிமாவில் அவர்களின் அற்புதமான நடிப்பு, அர்ப்பணிப்பு, கமர்ஷியல் விஷயங்கள் என இவை அனைத்தும் தென்னிந்திய சினிமாவை பெருமை கொள்ள செய்கிறது.


இந்த சிறப்புகள் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் நானும் அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது எனக்கான நேரம்" என தன்னம்பிக்கையுடன் கூறினார்.

Countdown Begins! India’s most anticipated film Pushpa 2: The Rule New Poster Unveiled

 *Countdown Begins! India’s most anticipated film Pushpa 2: The Rule New Poster Unveiled: ‘50 Days to Witness Pushpa Raj’* 



As the countdown to one of the most anticipated films of 2024 continues, the makers of ‘Pushpa 2: The Rule’ have unveiled a striking new poster featuring the charismatic Allu Arjun. The poster showcases the star sitting confidently on a chair, embodying the swagger and intensity that fans have come to love. With just 50 days left until the film's theatrical release on December 6, 2024, anticipation is at an all-time high.


The film, a sequel to the blockbuster ‘Pushpa: The Rise,’ promises to elevate the action and drama to new heights. Mythri Movie Makers took to social media to share the poster, captioning it, "The wait gets shorter. 50 days to witness Pushpa Raj and his blockbuster rule."


https://www.instagram.com/p/DBNrvgfyl1j/?igsh=NDdmZnc2eHp0cjZi


‘Pushpa 2: The Rule’ is expected to delve deeper into the gripping narrative of Pushpa Raj, played by Allu Arjun, as he navigates the treacherous world of smuggling and power dynamics. The film also stars Rashmika Mandanna and Fahadh Faasil. Fans are eagerly speculating about new characters, thrilling plot twists, and, of course, Allu Arjun’s signature performance that made the first film a massive success.


As the release date approaches, promotional events and teasers are likely to further stoke the excitement among fans. Directed by Sukumar, Pushpa 2: The Rule releases in theatres on December 6.

Wednesday 16 October 2024

மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 - படத்திற்கு

 *'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 - படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டிருக்கிறது*







'மாஸ் கடவுள்'  நந்தமூரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு - தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14  ரீல்ஸ் பிளஸ் - எம். தேஜஸ்வினி நந்தமூரி - கூட்டணியில் தயாராகும் #BB4  எனும் படத்திற்கு 'அகண்டா 2- தாண்டவம் ' என பெயரிடப்பட்டு , அதன் தொடக்க விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. 


 'மாஸ் கடவுள்' நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, #BB4 அகண்டா 2 தாண்டவம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் பரபரப்பான பிளாக்பஸ்டர் அகண்டா திரைப்படத்தின்  தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் படத்தைத் தயாரிக்கின்றனர், அதே நேரத்தில் எம் தேஜஸ்வினி நந்தமுரி இந்த பான் இந்தியா திரைப்படத்தை வழங்குகிறார்.


படக்குழு மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அகண்டா 2 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார்.


அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார்.  மேலும் அவர் பிரமாண்ட துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.


நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை  வெளியிட்டார், இது கதையில் பிணைக்கப்பட்ட ஆன்மீக கூறுகளை வெளிப்படுத்தும் அதே நேரம்,  எஸ் தமனின் அற்புதமான ஸ்கோர் உண்மையிலேயே தனித்து நிற்கிறது, இந்த தீம்  படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுகிறது. 


நந்தமூரி பால கிருஷ்ணாவை மாஸாக  திரையில் காட்சிப்படுத்துவதில் பொயபட்டி ஸ்ரீனு தனித்துவமான திறமை மிக்கவர். அதிலும் நந்தமூரி பாலகிருஷ்ணாவை மாஸ் மகாராஜாவாக  காட்சிப்படுத்தும் வகையில், ஐன்  சக்தி வாய்ந்த திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீ ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் டி டெடகே ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகவும், தம்மி ராஜு பட தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.  'அகண்டா' படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த எஸ். தமன் அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.


இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும், ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் இந்த பரபரப்பான கூட்டணியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகண்டா 2 க்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும், மேலும் இந்த அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 


நடிகர்கள்: மாஸ் கடவுள் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால்


தொழில்நுட்பக் குழு : 


எழுத்து & இயக்கம் : பொயபட்டி ஸ்ரீனு 

தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா 

தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ் 

வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி 

இசை : எஸ். தமன் 

ஒளிப்பதிவு : சி. ராம் பிரசாத் & சந்தோஷ் டி டெடகே 

கலை இயக்கம் : ஏ.எஸ். பிரகாஷ் 

படத்தொகுப்பு : தம்மி ராஜு 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam

 *God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents #BB4 Akhanda 2 Thaandavam Launched Splendidly, Title Theme Unveiled*







God Of Masses Nandamuri Balakrishna and Blockbuster maker Boyapati Sreenu’s fourth collaboration #BB4 is titled Akhanda 2 Thaandavam, and it’s the sequel for their sensational blockbuster Akhanda. Raam Achanta and Gopichand Achanta will produce the movie on 14 Reels Plus Banner, while M Tejaswini Nandamuri presents this Pan India project.


Akhanda 2 was launched splendidly today in the presence of the entire core team and also a few guests. For the muhurtham shot, Tejaswini switched on the camera, while Brahmani sounded the clapboard. Balakrishna uttered a powerful dialogue for the muhurtham shot.


Pragya Jaiswal who played the leading lady in Akhanda is also part of the sequel, and she also graced the grand launching ceremony.


Nandamuri Ramakrishna unveiled Akhanda 2 Title Theme that indicates the spiritual elements woven into the story. What truly stands out is the terrific score of S Thaman, though it also ensures the grand production quality.


Boyapati penned a powerful script with universal appeal to show NBK in much commanding role. The movie boasts a talented team of technicians. C Ramprasad will crank the camera, along with Santoshh D Detakae. AS Prakash is the art director, while Tammiraju is the editor.


This is one of the most anticipated films in Indian cinema, with every moviegoer eagerly awaiting the return of this sensational combination. Regular shooting for Akhanda 2 will commence soon, and expectations are high for this monumental sequel.


Cast: God Of Masses Nandamuri Balakrishna, Pragya Jaiswal


Technical Crew:

Writer, Director: Boyapati Sreenu

Producers: Raam Achanta, Gopi Achanta

Banner: 14 Reels Plus

Presents: M Tejaswini Nandamuri

Music: Thaman S

DOP: C Ramprasad, Santoshh D Detakae

Ex-Producer: Koti Paruchuri

Art: AS Prakash

Editor: Tammiraju

PRO: Yuvraaj

Marketing: First Show

Vettaiyan Movie Review

Vettaiyan Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் எதிர்பாத்த படம் இன்னிக்கு  வெற்றிகரமா theatre ல ஓடிட்டு இருக்கற ரஜினி ஓட 170 படம் வேட்டையன் தான் பாக்க போறோம். இந்த படத்தை jaibheem டைரக்டர் TJ ஞானவேல் தான் direct பண்ணிருக்காரு. இதுக்கு அனிருத் இசைஅமைச்சிருக்காரு. இந்த படத்துல  Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Ritika Singh, Dushara Vijayan, Rohini, Rao Ramesh, Abhirami and Ramesh Thilak. னு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்தோட interesting ஆனா விஷயங்களை ஏற்கனவே நாங்க போட்ருக்கோம். அந்த வீடியோ வ நீங்க இன்னும் பாக்கலானே கண்டிப்பா போய் பாருங்க. சோ வேட்டையன் படம் எப்படி இருக்குனு பாப்போம் வாங்க. 

Vettaiyan Movie Review 

https://youtu.be/E4j2C1uO_1A?si=eW1msFF2Xrcwy_CN

இந்த படத்தோட கதை என்னன்னு பாப்போம். ஜெயிலர் படைத்து போலவே இந்த படத்லயும் ரஜினி ஒரு போலீஸ் officer அ இருக்காரு. இவருக்கு நியாயம் தான் முக்கியம் அதுனால சட்டத்தை தன்னோட கைல எடுக்கற ஒரு போலீஸ் அ இருக்காரு. அதே சமயம் அமிதாப் பச்சன் ஒரு சீனியர் lawyer அப்புறம் human rights சாம்பியன் அ இருக்காரு. இவரை பொறுத்த வரையும் சட்டம் தான் எல்லாமே அதுக்கு மரியாதை குடுக்கறவரை இருக்காரு. இந்த மாதிரி இவங்க ரெண்டு பேருக்கும் நேர்மாறான கருத்துகள் இருக்கு. நம்ம ட்ரைலர் லேயே பாத்திருப்போம் SP Athiyan அ வர ரஜினி அ encounter specialist னு அறிமுகம் பண்ணுவாங்க. இவரு அந்த மாதிரி நெறய ரவுடி காலா encounter னால போட்டு தள்ளிருப்பாரு.  dushara vijayan ஒரு government school teacher அ இருப்பாங்க. இவங்கள தான் ஒருத்தன் rape பண்ணி கொலை பண்ணிடுவான். இந்த incident னால மக்கள் கொந்தளிச்சு மீடியா ஓட pressure ஒரு பக்கம், போலீஸ் higher officials ஓட பிரஷர் ஒரு பக்கம் னு ரஜினி ஒரு ஆல encounter பண்ணிடுவாரு. கடைசில தான் அமிதாப் மூலமா தெரியவரும் தான் சுட்டது ஒரு அப்பாவியா . இதுக்கு அப்புறம் என்ன ஆகுது? இந்த கொலை எப்படி ஒரு பெரிய corporate அ நடத்துற ராணா கிட்ட connect ஆகுது? ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.

first half ல   முதல் 30 நிமிஷம் ரஜினி fans க்கு treat தான் ஏன்னா கைதட்டற moments நெறய இருக்கு. கதை எங்கயும் சிதறம செம speed அ ரொம்ப விறுவிறுப்பா எடுத்திருக்காரு ஞானவேல்.  இன்டெர்வல் க்கு அப்புறம் என்ன மாதிரி போகும் ன்றதே ரொம்ப ஆர்வமா இருக்குனு தான் சொல்லணும். second half ல ஒரு சாதாரண மனுஷன் படுற கஷ்டம் அப்புறம் முக்கியமான கதை ஏ இங்க தான் வருது.  கடைசியா வர ரஜினி ராணா ஓட meeting தான் செமயா இருக்கு. இந்த படத்தோட எல்லா சண்டை கட்சிகளும் விசில் பறக்கிற அளவுக்கு சூப்பர் அ cherograph பண்ணிருக்காங்க. இந்த எல்லா scenes யும் நமக்கு impact ஆகுறதுக்கு anirudh ஓட music யும் ஒரு காரணம்.  


அனிருத் ஓட background score னு பாக்கும் போது அவரோட songs எல்லாமே செமயா இருக்கு. குறிப்ப hunter title track தான் peak ல இருக்கு. அப்படியே அந்த ரஜினி effect அ குடுக்கற ஒரு best song அ இருக்குனு தான் சொல்லணும். 

ரஜினிகாந்த் எப்பவும் போல இந்த படத்தை தூக்கி பிடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். patrick அ வர fahad fasil ஒரு smart ஆனா திருடன் அ இருக்காரு. இவரோட காமெடி portions யும் ரசிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருக்கு. இவரை ரஜினி தான்  technology க்காக help க்கு வச்சிருப்பாரு. மஞ்சு warrier ரைஜினி ஓட மனைவியா ஒரு youtube channel அ வச்சு நடித்திடு இருப்பாங்க. ஆனாலும் இவங்களோட performance செமயா இருக்குனு தான் சொல்லணும். படத்தோட கடைசில இவங்களுக்கு ஒரு mass ஆனா scene ஒன்னும் வரும் அதுவும் செமயா இருக்கும். ராணா asusual ஒரு வில்லன் அ செமயா வந்துட்டு போய்ட்டாரு. இவரோட ஒரே குறிக்கோளை கல்வி யா வச்சு காசு பாக்கிறது தான்.  Dushare vijayan தான் மெயின் ஆனா கேரக்டர் அ இருக்காங்க இவங்கள சுத்தி தான் கதையே நகுறது. ரஜினி,  காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் ன்ற மாதிரி தான் இருப்பாரு அப்படியே மறுபக்கம் Judge satyadev அ வர அமிதாப் பச்சான்  அ பாத்தீங்கன்னா அவரசப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி ன்ற மாதிரி ரெண்டு பேரும் வேற ஒரு கண்ணோட்டத்துல பாக்கற இவங்க,  மோதிக்கிறது highlight அ இருக்கு.    இன்னும் சொல்லப்போனா அமிதாப் பச்சான் யும் ரஜினி ஓட காம்போ வும் செமயா suit ஆயிருக்கு.


இந்த படத்துல கிட்ட தட்ட jaibheem சொல்ற சோசியல் message இதுலயும் இருக்குனு தான் சொல்லணும். எப்படி போலீஸ் ஓட encounters முறை தவருது, எப்படி மீடியா ல தப்பான news யும், morph ஆனா videos வந்து மக்கள் கிட்ட தப்ப ஆனா நபர் அ கெட்டவன் னு சித்திரிக்குது னு அழகா காமிச்சிருக்காரு. அது மட்டும் கிடையாது, போலீஸ் விசாரணை னு வரும் போது பாகுபாடு பாக்காம இருக்கிறதா விட்டுட்டு அங்கேயும் ஏழை பணக்கரா வித்யாசத்தை பாத்து விசாரணை பண்ணறீங்க ன்றதும் இதுல காமிச்சிருக்காங்க. அதே மாதிரி பணக்காரங்க னால நம்ம கல்வி எப்படி மோசமா போய்ட்டுருக்குனும், இதுனால ஏழை அப்புறம் மிடில் class குடும்பத்துல இருந்து வர பசங்களோட வாழக்கை எப்படி கேள்விக்குரிய நிக்குது ன்றது தான் இந்த படத்தோட மெயின் விஷயங்களை இருக்கு.  


நம்ம இப்போ வாழற இந்த உலகத்துல நம்மக்கு எல்லாமே instant அ ஒரு விஷயம் கிடைக்கணும் அப்போ தான் நமக்கு திருப்தியா இருக்கும். அந்த மாதிரி தான் இந்த படத்துல instant அ தப்ப பண்ண உடனே சுட்டு கொள்ளணும் ன்றது விட நம்ம கொஞ்சம் சட்டது மேல நம்பிக்கை வைச்சு கொஞ்சம் பொறுமையா இருந்த எல்லாமே கரெக்ட் அ sort out ஆயிடும் நும் தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க.      

மொத்தத்துல ஒரு நல்ல investigative thriller social drama படம் கண்டிப்பா miss பண்ணிடாதீங்க.

Black Movie Review

Black Tamil Movie Review 

ஹாய் மக்களே இந்த வீடியோ பாக்கற எல்லாருக்கும்  சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். இன்னிக்கு நம்ம வீடியோ ல இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கிற ஜீவா, பிரியா பவனி ஷங்கர் நடிச்சிருக்கற black அ தான் பாக்க போறோம். இந்த படத்தை   K G Balasubramani தான் direct பண்ணிருக்காரு இந்த படத்து மூலமா டைரக்டர் அ அறிமுகம் ஆகுறாரு. இந்த படத்தோட ட்ரைலர் ரிலீஸ் ஆனா ஒடனே மக்கள் எல்லாம் இது ஏதோ ஒரு hollywood படத்தோட சம்பந்த படுதே னு நினைச்சிருந்தாங்க. ஆனா அது தான் சேரி இந்த படம் coherence ன்ற  hollywood படத்தோட remake னு அதிகாரபூர்வமா சொல்லிருக்காங்க. இந்த படத்துல Vivek Prasanna, Yog Japee, Sha Ra, and Swayam Siddha லாம் நடிச்சிருக்காங்க. 2013 ல ரிலீஸ் ஆனா coherence கதையை பாத்தீங்கன்னா ஒரு night time ல miller comet ன்ற வால்நட்சத்திரம் pass ஆகும். அதுனால parallel universe ஓட merge ஆகிடுது. 

Black Movie Video Review 

https://youtu.be/QCX_Por5tO8?si=RDY12lLVMKEaw2ZX

இது நடக்கும் போது ஒரு வீட்ல எட்டு friends இருப்பாங்க இவங்கள மாதிரியே அந்த யூனிவெர்ஸ் ல எட்டு பேரு இருப்பாங்க. இவங்க ரெண்டு set யும் சண்டை போட்டு ஒருத்தர ஒருத்தர அடிச்சிப்பாங்க. இது தான் இந்த படத்தோட கதையை இருக்கும். ஆனா தமிழ் ல ரிலீஸ் ஆயிருக்கிற இந்த படத்துல சில மாறுதல்களை பண்ணிருக்காங்க னு சொல்லலாம். marvel படத்தை பாத்திருந்திங்கன்னா உங்களுக்கு alternate universe அ பத்தி ஐடியா இருக்கும். அப்படி இல்லனா கொஞ்சம் கஷ்டம் தான். ரொம்ப simple அ சொல்ல போன. நம்ம பூமி ல இருக்கோம் இதே மாதிரி பல universe இருக்கு னு இந்த படத்துல சொல்ல படுது. அதுல நம்மள மாதிரி நெறய பேரு இருப்பாங்க, அவங்க எல்லாருக்கும் நமக்கு தோன்ற எண்ணங்கள், செயல்கள் எல்லாமே ஒண்ணா  தான் இருக்கும் ஆனா அது முன்ன பின்ன நடக்கலாம் னு ன்றது தான் இந்த படத்தோட பின்னணி னு சொல்லலாம். english படத்துல பாத்தீங்கன்னா 8 பேரு இருப்பாங்க ஆனா இந்த படத்துல characters ரொம்ப கம்மி. இந்த படத்தோட கதை என்னனு பாக்கும் போது, ஜீவா வும் பிரியா பவனி ஷங்கர் க்கும் கல்யாணம் ஆகி 7 வருஷம் கிட்ட ஆயிருக்கும். ஒரு நாள் friends லாம் இல்லாம தனியா இவங்க ரெண்டு பேரும் மட்டும் time spend பண்ணனும் னு இவங்க லொட ஒரு வில்லா இருக்கு அதுக்கு போறாங்க. அது actual அ ஒரு gated community சோ அங்க இருக்கற எல்லா வீடும் ஒரே மாதிரி தான் இருக்கும். அங்க இன்னும் யாரும் குடி வந்திருக்க மாட்டாங்க இவங்க தான் முதல் ஆளு அங்க தங்க வர்ருது. அன்னிக்கு night நெறய அமோனிஷ்யமான விஷயங்கள் நடக்குது இது எதுனால நடக்குது? இந்த விஷயங்கள் கண்டுபிடிச்சு முற்றுப்புள்ளி வச்சாங்களா ன்றது தான் இந்த படத்தோட கதை. இந்த படத்தோட ரெண்டு மிக பெரிய plus அ editing யும் visuals யும் தான் சொல்லுவேன். அவ்ளோ அழகா ரெண்டு aspects யும் சூப்பர் அ workout ஆகிருக்கு. philomin raj ஓட editing பக்கவா இருக்கு. இது ஒரு sci fi திரில்லர் அதுக்கு ஏத்த மாதிரி ரொம்ப அருமையா எங்கயும் கவனம் சிதறாத மாதிரி படத்தை எடுத்துட்டு வந்திருக்காரு. இந்த படம் முழுக்க முழுக்க நைட் ல தான் நடக்குது இந்த நைட் time அ ஒரு பயப்புற்ற விஷயமா காமிச்சு அங்க இருக்கற வீடு, characters னு ரொம்ப அருமையா கேமரா ல பதிவு பண்ணிருக்காரு Gokul benoy . அது மட்டும் கிடையாது இது universe ஒண்ணா சேருறதுனால மத்த characters ஓட எண்ணங்கள் எப்படி இருக்கும் ன்றது மாத்தி மாத்தி காமிச்சிருக்க விதமும் நல்ல இருக்கு. இந்த படத்தோட ஒரு சில scenes அ நல்ல highlight பண்ணிவிடுறத bgm யும் music யும் தான் அந்த வகைல sam cs அ பாராட்டியே ஆகணும். Jiva க்கு ரெண்டு வருஷம் கழிச்சு இது ஒரு நல்ல comeback movie னே சொல்லலாம். Demonty colony 2 க்கு அப்புறம் priyabhavani shankar இந்த படத்துலயும் நல்ல நடிச்சிருக்காங்க. first half ரொம்ப interesting  அ விறுவிறுப்பா எடுத்துட்டு போறாங்க. அதே சமயம் second half ல தான் flashback story அ காமிக்கிறாங்க. என்ன தான் ஒரு சில இடம் கொஞ்சம் மெதுவா போற மாதிரி இருந்தாலும் படம் நல்ல வந்திருக்கு னே சொல்லலாம். இன்னும் சொல்ல போன நம்மள யோசிக்க வைக்கிற படமா அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். மொத்தத்துல ஒரு நல்ல sci fi படம் கண்டிப்பா இந்த படத்தோட technical விஷ்யங்கள்க்கவே theatre போய் பாக்கிறது worth தான். கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.